Powered By Blogger

Thursday, 24 November 2011


கடந்த சில நாட்களாகவே, Dam999 படத்தைப் பற்றியதான ஒரு செய்திகள், பத்திரிக்கைகளில் ஆகட்டும், தொலைக்காட்சிகளில் ஆகட்டும் ஆக்கிரமைத்துக் கொண்டிருக்கின்றன. முல்லை பெரியார் அணைக்கட்டு சம்பந்தமான ஒரு சர்சைக்குரிய படம். எனக்கு தெரிந்து முதல் முதலில் நாடாளுமன்றத்தில், தி.மு.கவும், அ.தி.மு.கவும் ஒன்றாக இணைந்து ஒரு விசயத்திற்காக போராடுகின்றது என்றால் அது இந்த படத்தின் தடை பற்றியது தான். இருவரையும் இணைத்த்தற்காக வேண்டுமென்றால் இந்த பட்த்தினைப் பற்றி பாராட்டிக்கொள்ளலாம்.


நம்மாளுங்களுக்கு எப்போதுமே கண்ணுகெட்டதுக்கப்புரம் தான் சூரிய நமஸ்காரம். இந்த படத்தைப் பற்றியதாக இருக்கட்டும், அல்லது கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றியதாக இருக்கட்டும், முதலிலோ அல்லது பாதியிலோ போராட யவனும் வரமாட்டான். சாகுர நேரத்துல சங்கரா சங்கரான்னா எப்படி?. இவ்வளவு தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படத்தினைப் பற்றி நமக்கு இப்போதுதான் தெரிகின்றது என்பது வெக்கக்கேடு மற்றும் நம்பும்படியானதாக இல்லை. கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சென்னையில் தான் நடந்திருக்க வேண்டும், அதற்கான வசதிகள் இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிகமாக உள்ளது. ஹிந்தி திரைப்படத்தின் முக்காவாசி கிராபிக்ஸ், எடிடிங் எல்லாம் சென்னையில் நடந்துகொண்டிருக்கும் போது, ஏன் அவதார் படத்தின் கிராபிக்ஸே சென்னை நடந்திருக்கும் போது இது மட்டும் எப்படி வேறுமாநிலத்தில் நடந்திருக்க முடியும்?



அது “டாம் உடைந்து நிறைய மலையாளிகள் இறந்து போனாலும், அவர்களின் அடுத்த தலைமுறை சிறிது காலமானாலும் திரும்ப வரும், ஆனால் தமிழர்களின் 5 மாவட்டங்களில் நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு, பாலைவனமாகும், அவர்களின் இந்த தலைமுறைகள் பட்டினியால் உயிர்விடுவார்கள். மேலும் உடைந்த இடத்தில் மீண்டும் அணைகட்ட ஒரு மலையாளிகளும் அனுமதிக்கமாட்டார்கள். தமிழகத்துக்கு வேரு எந்த மாநிலமும் தண்ணீர் தராது. முல்லை பெரியார் அணைக்கட்டு ஒரு பாடமாக அமைந்து விடும். கேரள அரசு புதிய அணைகட்டியிலிருந்து நீர் கொடுக்க தயாராக உள்ளது. ஆகவே தமிழர்களே சிந்திப்பீர்”

மலையாளி நம்மள சிந்திக்க சொல்லுர அளவுக்கு ஆகிடிச்சு நம்ம நிலம.



ஒரு விவகாரமான விசயம் சர்சயில் நீதிமன்றத்தில் இருக்கும் போது அதை படமாக எடுக்க எத்தனை துணிவு?. 
இன்னும் பெரியார் அணையைப் பற்றிய ஆய்வரிக்கை சமர்பிக்கப்படாத நிலையில் இவர்கள் யார், அதை வலிமையில்லை என்று சொல்ல?. 
எத்தனையோ வருடங்களுக்கு முன்னறே ஆய்வு செய்ய தொடங்கிய கேரள அரசாங்கம், இன்னமுமா இது உடைந்து போகும் என்று வாய்வழியாக சொல்லிக் கொண்டிருக்கும் விசயத்தை, அவர்கள் எடுத்த டெஸ்ட்களின் மூலமாக அறிகையாக வலிமையில்லை என்று நிருபித்துக் காட்டமுடியுமா?.

ஒருத்தனுக்கு நோய் வந்தா, அவன் செத்துருவான் அவன் குடும்பம் இப்படியாகிடும்னு சொல்லுரது ஓகே. இது என்னடான்னா,  நல்லாயிருக்குரவன படையில கொண்டுபோகுறமாதிரில இருக்கு.

நம்ம தண்ணீரை எடுத்துகிட்டு, அவன் அணைகட்டி, நமக்கே தருவானாம்.

Sunday, 20 November 2011


மாதா சிலைக்கு மட்டும் உயிர் உண்டா...?



  ந்து மத வேதங்களும் உபநிசதங்களும், சிருஷ்டி காலத்திற்கு முன்பு கடவுள் நீரின் மேல் மிதந்து கொண்டிருந்ததாக சொல்கிறது.

 அப்படி இருந்ததனால் கடவுளுக்கு நாராயணர் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

  கிறிஸ்த்துவ மத வேத நூலான பைபிளில் ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரம் முதல் இரண்டு வசனங்களில் ஆதியில் தேவன் வானத்தையும், பூமியையும் படைத்தார்.  பூமியானது ஒழுங்கில்லாமலும், வெறுமையாகவும் இருந்தது.  ஆழத்தில் இருள் கவ்வியிருந்தது.  தேவ ஆவியானவர் ஜலத்தின் மீது அசைந்தாடி கொண்டிருந்தார் என்று சொல்கிறது.


  ஆதியாகமம் உருவாவதற்கு முன்பே வேதங்கள் உருவாகி விட்டதினால் பைபிளுக்கு இந்த கருத்தை தானமாக கொடுத்தது நிச்சயம் வேதங்களாகத் தான் இருக்க வேண்டும்.

  கர்த்தரின் முதல் படைப்பான ஆதாம் தனது நூற்றி முப்பதாவது வயதில் பிள்ளை பெற்றான் எனவும் தொள்ளாயிரத்து முப்பதாவது வயதில் இறந்து போனதாகவும் சொல்லப்படுகிறது.

ஆதாமுக்கு பின் வந்த சந்ததியினர் அவ்வளவு நீண்ட ஆயுள் காலம் வாழ்ந்ததாக தெரியவில்லை.


  ஆதியாகமம், ஆறாம் அதிகாரம் மூன்றாம் வசனத்தில் என் ஆவி என்றைக்கும் மனிதர்களோடு போராடுவதில்லை அவன் வெறும் மாமிசம் அவன் பூமியில் இருக்க போகும் நாட்கள் நூற்றி இருபது வருஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 இந்து மத புராணங்களும் ஜோதிட சாஸ்திரமும் மனிதனின் நிகர வயது நூற்றி இருபதே என்கிறது.

 மேலும் பைபிளில் பல இடத்தில் ராமா என்ற பெயர் அடிக்கடி பேசப்படுகிறது.

 உதாரணமாக நோவாவின் வம்ச வரலாற்றை பேசும் போதும் ஆதியாகமம் துவங்கி மத்யோயி வரை சுமார் முப்பது அத்தியாயங்களில் பல இடத்தில் ராமா என்ற வார்த்தை மனித பெயர்களாகவும் அரச பெயர்களாகவும் பரம்பரை பெயர்களாகவும் பயன் படுத்தப்பட்டுள்ளன 


 புதிய ஏற்பாட்டில் இயேசு தனது பன்னிரெண்டாவது வயதில் யூத தேவாலயத்தை சேர்ந்த புரோகிதர்களிடம் சில கேள்விகள் கேட்டார் என்பதோடு நிறுத்திவிட்டு தனது முப்பதாவது வயதில் ஞான ஸ்தானம் பெற்றார் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது.

 பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரையிலுள்ள பதினெட்டு ஆண்டுகளை அவர் எங்கு வாழ்ந்தார் என்ன செய்தார் என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் தரப்படவில்லை.

  பத்தொன்பதாவது நூற்றாண்டை சேர்ந்த நிக்கோலஸ் நோடாவிக் என்ற ரஷ்ய அறிஞர் தாம் எழுதிய இயேசு கிறிஸ்த்துவை பற்றிய நூலில் அவர் அந்த பதினெட்டு வருஷ காலத்தை இந்தியாவில் கழித்தார்.  இந்துக்களிடம் யோக பயிற்சி பெற்றார் என்று கூறுகிறார்.


  இயேசு கிறிஸ்த்துவின் மலை பிரசங்கத்தை ஆழ்ந்து படிக்கும் போது அது இந்து மத கருத்தாகவும், பௌத்தர்களின் தத்துவமாகவும் இருப்பதை காண முடிகிறது.

 இயேசு கடலையும் பெருங்காற்றையும் கட்டளையிட்டு நிறுத்தியதை பார்க்கும் போது ராமன் இலங்கைக்கு படையுடன் செல்லும் முன்பு சமுத்திர ராஜனை எச்சரித்தது போலவே இருக்கிறது.

  இயேசு தீய ஆவிகளை ஓட்டிய விதம் ஊமைகளை பேச வைத்தல், குருடர்களை பார்க்க வைத்தல்.  முடவர்களை நடக்க வைத்தல், தனது ஆடையை தொட்ட மாத்திரத்திலேயே நோயை குணப்படுத்தியது, ஐந்து அப்பங்கள் மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு விருந்தளித்த விதம் எல்லாமே இந்து புராணங்களை அடிப்படையாக கொண்டது எனவும் ஒரு யோக பயிற்சியாளரின் நடைமுறை வாழ்க்கையெனவும் சொல்லத் தோன்றுகிறது.

   இந்து மதத்தில் பிரம்மா என்பது படைக்கும் கடவுளை குறிப்பது போல் கிறிஸ்த்துவர்களின் கர்த்தரும் படைக்கும் கடவுளையே குறிப்பதாகும்.

 கர்த்தா என்றாலே உருவாக்குபவர் என்பது தான் அர்த்தமாகும்.

மேலும் கிறிஸ்த்துவ மதத்தில் ஆதியில் விக்கிரக ஆராதனையே இருந்தது.

 காலம் செல்ல செல்லத் தான் அதன் ஒரு பிரிவினர் அதாவது மார்டின் லூதர் வழியை பின்பற்றுவர்கள்  சிலை வழிபாட்டை கைவிட்டனர்.

   இன்றும் உலகம் எல்லாம் பெருவாரியாக இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்த்துவர்கள் சிலை வழிபாடுகளையே நடத்துகிறார்கள்.

 இந்து மதத்தில் எப்படி தாய் தெய்வ வழிபாடு என்ற பெண்மை வணக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதோ அதே போலவே கிறிஸ்த்துவ மதத்தில் அன்னை மரியாளின் வழிபாடு சிறப்பிடம் பெற்றிருக்கிறது.

 வழிபாட்டு முறையில் கூட தூபம் காட்டுதல், தீபம் ஏற்றுதல், மணியோசை செய்தல் முன்னோர்களை வழிபடுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்றவைகள் இந்து மதத்தினரை போல உலகம் முழுவதும் கிறிஸ்த்துவ மக்கள் கடைபிடிக்கிறார்கள்.

 இந்தியாவிலுள்ள கத்தோலிக்கர்கள் தலைக்கு மொட்டையடித்தல், கெடா வெட்டுதல், பாத யாத்திரை போகுதல், தேர்த் திருவிழா நடத்துதல், சப்பரம் தூக்குதல், புனித நீராடுதல், விளக்கு பூஜை நடத்துதல் போன்றவைகளை இந்துக்கள் போலவே செய்கிறார்கள்

 வாடிகனிலுள்ள மாதா சிலைக்கு அபிஷேசம் செய்து கற்பூர ஆரத்தி மட்டும் தான் காட்டப்பட வில்லையே தவிர மற்ற எல்லா விதமான வழிபாடுகளும் இந்து மதத்தை பின்பற்றியே நடக்கிறது.

ஆனால் இதை அறியாத அல்லது அறிய விரும்பாத உண்மையை மறைக்கும் கிறிஸ்தவ பாதிரிகளில் பலர் மனம் திரும்புங்கள் என இந்து மக்களை தங்கள் மதத்திற்கு இழுக்கிறார்கள்

 இவர்கள் சொல்லும் முக்கியமான குற்ற சாட்டு நீங்கள் கல்லையும் மண்ணையும் வணங்குகிறிர்கள்

 அவைகளுக்கு உயிர் இருக்கிறதா? உங்களை காப்பாற்றும் ஆற்றல் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்

 நம் தெய்வ சிலைகளுக்கு சக்தி இருக்கிறது இல்லை என்பதை பிறகு பார்க்கலாம்

நம் மாரியம்மனை கல்லால் செய்தால் வராத சக்தி கன்னி மரியாளாக செய்தால் வந்து விடுமா?

 எனவே உருவ வழிபாடு தாழ்மையானது விரும்ப தகாதது என சொல்லும் கிறிஸ்தவர்கள் முதலில் தங்களை சீர் படுத்தி கொள்வது நல்லது

ஏன் என்றால் ஏசுநாதர் முதலில் உன் கண்ணில் உள்ள தூசியை எடுத்துவிட்டு மாற்றான் கண்ணை பார் என்று சொல்கிறார்

அதை முதலில் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்




The Seventh Sence



ஏழாம் அறிவு தமிழர்களை ஏய்க்கும் அறிவா?

இந்த படத்தை பாருங்க அதுக்கப்புறம். “தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா” என்ற வாசகம் ஆயிரம் முறை நினைவுக்கு வரும் அப்படி ஒரு தமிழனின் பெருமை பேசும் படத்தை எடுத்திருக்கிறேன் என்று டயலாக் அடிக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.


வன்கொடுமைகளாலும் போர்களாலும் தலைகுனிந்து நிற்கின்ற தமிழனை ஒரு திரைப்படம் தலைநிமிர வைத்து விடும் என்றால் இதை விட கேவலாம் வேறு என்னவாக இருக்க முடியும்? ஒரு திரைப்படத்தை வைத்து தமிழனை தலைநிமிர வைக்க வேண்டிய துரதிஷ்டத்தை எங்கு போய் முறையிடுவது.


சரி இவ்வளவு உன்னதமான நோக்கத்திற்கு எடுக்கப்பட்ட படத்தில் இவ்வளவு ஆபாசங்கள் ஏன்? ஒருவேளை இதுவும் தமிழனை வாய் பிளந்து, தலைநிமிர்ந்து பார்க்க வைக்கிற உத்தியோ?


அல்லது ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது தலைநிமிர்ந்து பார்த்தால் பதவி போய்விடும் என்று பம்மியவர்களின் வாரிசு
பட தயாரிப்பளர் பரமஏழை!? உதயநிதி ஸ்டாலின் இன்னும் சில கோடிகளுக்கு அதிபதியாகி தலைநிமிர வேண்டும் என்பதாக கூட இருக்கலாம்?


சோழ மன்னனின் வரலாற்று கதையை எடுக்க போகிறேன் என்று வக்கிரமான “ஆயிரத்தில் ஒருவன்”படம் எடுத்த செல்வராகவன் இதே டயலாக்கைதான் விட்டார். ஐரோப்பா நாடுகளிலும் பிற நாடுகளிலும் அகதிகளாக இருக்கிற ஈழத்தமிழனின் தாயக ஆசைகளை “தாய் தின்ற மண்ணே”என்று பாடல் வைத்து அவனின் பர்ஸை கொள்ளையடித்தது.அந்தப் படம் வேறு என்ன சாதித்தது? ரீமாசென்,ஆன்ட்ரியா இரண்டு நடிகைகளையும் ஆபாசமாக காட்டி சில அற்பர்களின் கண்களுக்கு விருந்தாக்கியதை தவிர?


சரி கதைக்கு வருகிறேன்


 “போதி தர்மரை தமிழர் என்றும் சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை கற்றுக் கொடுத்த்வர் என்றும்” என்று சொல்கிறார்கள் ஏழாம் அறிவு திரைப்பட கோஷ்டி.




போதி தர்மர் தமிழரா? இல்லையா? என்பதை பிறகு பார்ப்போம். தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்ட மாணவன் என்ற முரையில் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.  “காரத்தே”என்ற ஜப்பானிய மொழி சொல்லுக்கு நேரடி தமிழ் சொல் வெறும் கைகளால் சமாளித்தல் என்று பொருள்.




புத்த மதம் இந்தியாவில் தான் தோன்றியது என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அப்படி தோன்றிய புத்த மதம் என்னதான் அஹிம்சையை போதித்தாலும். காட்டில் இருந்த புத்த பிக்குகள் கள்வர்களிடமிருந்தும் காட்டு கொடிய விலங்குகளிடம் இருந்தும் பாதுகாக்க சில தற்காப்பு கலைகள் அவசியமாக இருந்தன அப்படி தற்காக்கும் போது கொல்லக்கூடாது என்பதற்காக ஆயூதங்கள் இல்லாமல் வெறும் கைகளால் சமாளிக்கின்ற கலைகளை காட்டு விலங்களின் அசைவுகள், அவை சண்டையிடும் முறை இவைகளை உன்னிப்பாக கவனித்து தற்காக்கும் கலையை விலங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்.




 “குங்பூ” ஸ்டைலில் இதனை பார்க்கலாம் டைகர்,சினேக்,மங்கி,ஈகிள் போன்ற வகைகளில் சொல்லித் தருவார்கள் புலி எப்படி பாய்ந்து தாக்கும். கழுகு எப்படி விரல்களால் பிடிக்கும் என்பன இவையெல்லாம் காட்டின் விலங்குகளிடம் புத்த பிக்குகள் கற்று உலகிற்கு அளித்த தற்காப்பு கலைகள். புத்த மதம் ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளுக்கு பரவியபோது இந்த தற்காப்பு கலைகளும் சேர்ந்தே அங்கு பரவியது. நீங்கள் கவனித்துப் பாருங்கள் புத்த மதம் எந்தெந்த நாடுகளில் இருக்கிறதோ இந்த தற்காப்பு கலையும் சேர்ந்தே இருக்கும்.


சரி போதி தர்மர் தமிழரா?


இதனை விளக்க நண்பர் திங்கள் சத்யா அவர்கள்
http://marakkanambala.blogspot.com/2011/10/blog-post.html  இந்தலிங்கில் விரிவாக கிழே


‘‘போதி தர்மரை, தமக்குறிய 28 சமயக் குரவர்களில் ஒருவராக போற்றுகிறது பவுத்தம். இவர் போதித்த பவுத்தக் கொள்கைகளைத்தான் ‘ஜென் தத்துவம்’ என ஜப்பானியர்கள் கூறுவதாக’’ சொல்கிறார் தமிழ் வரலாற்றுப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி. உலகம் முழுக்க உள்ள வரலாற்று நூல்களும் இவ்வாறுதான் சொல்கின்றன.

ஐரோப்பிய, வரலாற்று ஆய்வறிஞரான இ.டி.சி.வார்னர், ‘‘காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பவுத்த ஞானியான பிரஜ்னதாராவின் சீடன்தான் போதிதாரா. குருவைக் காட்டிலும் மிதமிஞ்சிய ஞானம் பெற்றிருந்த போதிதாராவை, ‘போதிதர்மா’ என்று பெயர் மாற்றியதே அவர்தான்’’ என்கிறார். வார்னரின் கூற்றுப்படி, போதிதர்மர், காஞ்சியிலேயே ஞானம் பெற்றிருந்திருக்கிறார்.

இந்நிலையில், ‘‘‘ஏழாம் அறிவு’ திரைப்படம், தாங்கள் கடவுளாகப் போற்றிவரும் ‘போதி தர்மரை’ இழிவுபடுத்துவதாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கில், வரலாற்றைத் திரித்துக் கூறி அவரை ‘தமிழராக’ சித்தரிப்பதாகவும், எனவே, அப்படத்தை தடை செய்யவேண்டும்’’ எனக் கோரியிருக்கிறது பவுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘நாகர் சேனை’ அமைப்பு.

இது குறித்து அவ்வமைப்பானது சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

‘‘ஏழாம் அறிவு திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நாயகன் சூர்யாவும், ‘காஞ்சிபுரத்தில் பிறந்து, சீனாவுக்குப் போய், தற்காப்புக் கலையை நிறுவிய போதி தர்மருக்கு, சீனாவில் எங்கு பார்த்தாலும் சிலைகள் உள்ளன. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டது. இதற்காகத்தான் நாங்கள் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தை தயாரித்துள்ளோம். படம் வெளியான பிறகு, ஒவ்வொரு தமிழனும் கர்வத்துடன் நடந்துகொள்வான்’ என்று தமிழர்களை உசுப்பேற்றும்விதமாகப் பேசியுள்ளனர்.

இங்கே, போதி தர்மரை ‘தமிழர்’ என்று ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் அடையாளப்படுத்தக் காரணம், ‘உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உணர்ச்சிகளை, உண்மைக்கு மாறாக தட்டியெழுப்பி, கோடிக்கணக்கில் காசு பார்க்கும் முயற்சிதானே ஒழிய, தமிழ் பற்று அல்ல. படம் குறித்த விளம்பரத்தில்கூட, ‘10 நிமிட காட்சிக்காக மட்டும், ரூபாய் 10 கோடி செலவு செய்யப்பட்டதாக’ சொல்லியிருப்பதே இதற்கு சான்று.

உண்மையில், ‘போதி தர்மர்’ ஒரு தமிழரே அல்ல. போதி தர்மரின் காலமெனப் பதிவுகள் கூறுவது, கி.பி.475 முதல் 550 வரையாகும். இந்தக் காலகட்டத்தில், அதாவது கி.பி. 300 முதல் கி.பி. 600-ம் ஆண்டுகள்வரை, தமிழகத்தை ‘களப்பிரர்கள்’ அரசாண்டதாக ஆய்வு நூல்கள் சொல்கின்றன. அந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் களைப்பிரர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்.’’ என்கிறது.

களப்பிரர் வரலாறு குறித்து, விரிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், இவர்களின் காலத்தை ‘‘தமிழகத்தின் இருண்ட காலம்’’ என, சிலர் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், களப்பிரர் காலத்தில்தான் ‘சமணமும் பௌத்தமும்’ தமிழகத்தில் தழைத்தோங்கி இருந்தது. சமணர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள். ‘சீவக சிந்தாமணி, வளையாபதி, நீலகேசி, திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது’ என, தமிழ் செம்மைக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுக்கு நிகரே இல்லை.

இங்கே, ‘‘களப்பிரர்கள் என்போர், ஒரே இனத்தவராக இல்லாமல், நாகர்கள், எயினர்கள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களை அதாவது பதினெட்டு கணங்களை உள்ளடக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.’’ என்கிறார் நாகர் சேனையின் தலைவரான கரிகாலன். கணம் என்பது, ஒரு கூட்டம், தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், களப்பிரர்களின் மூலம் எது? வலிமை பெற்றதற்கான பின்னணிகள் என்ன? தமிழகத்தினுள் படையெடுத்த காலம் எது? ஆரம்பத்தில் எந்தெந்த மன்னர்களை அவர்கள் தோற்கடித்தார்கள் என்பன போன்ற எந்த விபரங்களும் கிடைக்கவில்லை. அதே சமயம், ‘‘எண்ணிறைந்த பேரரசர்கள் அப்போது ஆண்டு மறைந்தனர்’’ என்று வேள்விக்குடிச் செப்பேடும், சின்னமனூர்ச் செப்பேடும் கூறுகின்றன.

ஆக, கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்களின் அடிப்படையில், வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிட்டவர்களுள் ஒருவன், ‘அச்சுத விக்கிரந்த களப்பாளன்’. களப்பிர மன்னர்களுள் ஒருவனான இவன், தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களையும் சிறைபடுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதாக கூறுகிறார்கள்.

யாப்பருங்கல விருத்தி’ நூலில் இவனது படைகளின், போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கி.பி.நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த ‘புத்ததத்தர்’ என்ற பௌத்த ஞானி, பாலி மொழியில் தான் எழுதிய ‘அபிதம்மாவதாரம்’ எனும் நூலில், “களப்பாளன், தமிழகத்தினை ஆண்டதனால், உலகினை ஆட்சி செய்தான்” என்று புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழநாட்டுப் பேரறிஞரான மயிலை சீனி.வேங்கடசாமி, தன்னுடைய ‘‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ எனும் நூலில், ‘‘களப்பிரர் தமிழரும் அல்லர், ஆரியரும் அல்லர்.’’ எனச் சொல்வதுடன், ‘‘அன்னோர், பிராகிருதம், பாலி ஆகியவற்றை தமக்குறிய மொழிகளாகக் கொண்டு வடபுலத்தினின்று வந்தவர்’’ என்கிற சதாசிவ பண்டாரத்தாரின் கூற்றையும் மேற்கோள் காட்டுகிறார். முடிவில், ‘‘களப்பிரர்களுடைய மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே’’ என்பதுடன், ‘‘களப்பிரர், தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர்’’ என்கிறார்.

களப்பிரர் காலகட்டத்தை அறியக்கூடிய மிகச்சிறந்த ஆவணங்கள், அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள், அப்போது உருவானவையே. களப்பிரர்கள் தமிழ் மொழியை ஆதரித்தவர்கள் என்றாலும், பாலி மொழியைத்தான் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ‘‘பின்னர் வந்த இந்து சமயத்தவர்கள், களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தையும், அரசர்கள் பற்றிய குறிப்புகளையும், அவர்களது தமிழ்ப் படைப்புகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டனர்’’ என்றால், நிச்சயம் அது மிகையாகாது.

பல்லவர்கள்:

கி.பி.300 முதல் கி.பி.600 வரை, களப்பிரர் காலம் என்று சொல்லும் அதே வேளையில், கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, ஏறத்தாழ 700 ஆண்டுகள் தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி புரிந்ததாகவும் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

இதை வைத்துப் பார்த்தால், களப்பிரர்களும் பல்லவர்களும், சமகாலங்களில் தனித்தனியாக ஆட்சி புரிந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘பல்லவர் பட்டயங்கள் அனைத்தும், பிராகிருத மொழியிலும், வேறுபல வடமொழியிலும்தான் இருக்கின்றன. பல்லவர் காலத்து தொண்டை மண்டலப் பேரரசிலும், வடமொழிதான் ஆட்சி செலுத்தியிருக்கிறது.

அக்காலத்தில், ‘பாரவி, தண்டி’ முதலிய வடமொழிப் புலவர்கள்தான் செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாறாக, கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை எந்தத் தமிழ்ப் புலவரும் பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை(சரி பார்க்கவும்). மேலும், பல்லவர், தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர். ஆனாலும், பிற்காலத்து அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பல்லவர்களும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

‘‘சரி, பல்லவர்கள் தமிழர்களா?’’

‘‘பண்டைய தமிழ்நாட்டிற்கும், இன்றைய தமிழ்நாட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நம்மிடையே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரையும், தமிழர்கள் என்கிறோம். அன்றைக்கு பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆயினும், அன்றைக்கு யாரெல்லாம் தமிழைப் பேசினார்களோ, தமிழை செம்மையுறச் செய்தார்களோ, அவர்களை எல்லாம் தமிழர் என்று சொல்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்தவகையில், பல்லவர்களும் தமிழர்களே’’ என்கிறார் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன்.

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீசனிடம் கேட்டபோது, ‘‘நெல்லையில் பேசக்கூடிய தமிழுக்கும், சென்னையில் பேசக்கூடிய தமிழுக்கும், வார்த்தைகளில், உச்சரிப்புகளில் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண்கிறோம். அப்படி, ஒரு எல்லைக்கும் இன்னொரு எல்லைக்கும் நடுவில் இருந்த மக்களின் வட்டார வழக்குகள், ஒரு காலத்தில் தனி மொழியாக உருவமெடுத்தன. அப்படி உருவானவைதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை.’ என்கிறார் பேராசிரியர் அன்பழகன். *(நம்ம தி.மு.க அன்பழகன்தாங்க).

இன்றைக்கு, இருமாநில எல்லையோர மக்கள், இரு மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டு வந்த பண்டைய தமிழகத்தில், ‘இரு மொழி, மும்மொழி’ எனப் பேசிய மக்களுக்கு, ‘இன்னதுதான் தாய்மொழி’ என்று யார் ஒருவரும் எழுதி வைக்கவில்லை. எனவே, ஒருவரின் தாய்மொழியை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது.’’ என்றவர்,

‘‘என்னுடைய மாணவரான டாக்டர்.மாணிக்கவாசகம், வர்மக்கலை குறித்த தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில், ‘போதிதர்மர்’ குறித்து ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, ‘காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் கந்தவர்மனுக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதி தர்மர்’ என்று கூறியிருப்பதும், ‘கி.பி.520-ம் ஆண்டுகளில்தான் போதி தர்மர் சீனாவுக்கு போயியிருக்கிறார்’ என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறார்கள்.

போதி தர்மரின் கால கட்டங்களை(கி.பி.520) வைத்து, அவரை, களப்பிரர் என்று எடுத்துக்கொண்டால்கூட, களப்பிரர்களை ‘கன்னடர்’ என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. கன்னடத்தின் மூலமொழியே தமிழ்தான். மிகப்பெரிய மேதையான போதி தர்மருக்கு, அப்போதிருந்த அணைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, பல்லவ மன்னனுக்கு பிறந்தவர் என்ற அடிப்படையிலும், திராவிடர் என்ற அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் தமிழர்தான் என்பதில் ஐயமில்லை’’ என்கிறார்.

‘‘களப்பிரரோ, பல்லவரோ! காஞ்சிபுரத்தை ஆண்ட அரசனின் மகனாகப் பிறந்த போதி தர்மர், பவுத்த நெறியை ஏற்றுக்கொண்டுதான் துறவியாக மாறினார். பின்னர் சீனாவுக்கு சென்று, அங்கே ஜென் தத்துவத்தையும் தற்காப்புக் கலையையையும் பயிற்றுவித்தார். ஆனால், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் சம்பந்தமான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது, போதி தர்மராக சித்தரிக்கப்படும் சூர்யா, அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது. இது, பவுத்தத்தை ஏற்றுக்கொண்ட பலகோடி மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவேதான், பவுத்தர்களின் மனதை புண்படுத்தும் இத்திரைப்படத்தை, உடனடியாக தடை செய்யவேண்டும்.’’ என்கிறது நாகர் சேனை.

நாகர் சேனை சொல்லும், ‘‘அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது’’ என்கிற கருத்து, ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே தெரிகிறது. அட்லீஸ்ட், வரலாற்றுப் படங்களிலாவது பாடல்களை தவிர்க்கும் டீசன்ஸியை, தமிழ்ப்பட இயக்குநர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. டாக்டர்.கலைஞர்கூட இப்படித்தான் ‘பொன்னர் சங்கர்’ என்கிற வரலாற்றுக் கதையை மொக்கையான ஒரு குத்துப்பாட்டுப் படமாக மாற்றியிருந்தார்.

முடிவுரை:

சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் கதாநாயனாக நடித்து, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ‘மஹதீரா’ திரைப்படம்கூட, முன்ஜென்ம நினைவுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒருவேளை, அதைப் பார்த்து ‘ஏழாம் அறிவு’ கோஷ்டியினர் ஆசைப்பட்டிருக்ககூடும். ஆனால், ‘போதி தர்மரை’ நினைவில் வைத்துக்கொண்டு சூர்யா&சுருதிஹாசன் ஸ்டில்ஸை பார்க்கும்போது, எனக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வருகிறது.